Mesiyaave | மேசியாவே | CHRISTMAS


by Ebenezer Breman




மேசியாவே மீட்பராக உலகினில் வந்தீரோ

இம்மானுவேலே நீர் எம்மோடு இணைந்திட வந்தீரோ

நறுமண மலர்கள் தூவி பாடி உம்மை வாழ்த்திடுவோம் 

தினம் உம் பாதம் வணங்கி பூசை செய்து மகிழ்ந்திடுவோம்

ஆதியும் எம் அந்தமும் நீரே


மாளிகை இல்லை புல்லனை மீதே

கண் மலர் விழித்தாயே

அரியணை இல்லை கிரீடமும் இல்லை

ராஜனாய் உயர்ந்தாயே

பெத்தலையின் தொழுவத்திலே

மானிடரின் கோலத்திலே

வந்தீரே எம்மைத் தேடி 

தேவ சித்தத்தின் நிறைவை நாடி


அன்பே உருவாம் தரணியில் மனுவாய்

தரிசனம் ஆனீரே

குருவே சரணம் திருவாய் மொழிந்து

திருவரம் கொடுப்பீரே

அகிலத்தையே மீட்கும் பரன்

தொழுவத்திலே பிறந்தாயன்றோ

வணங்குவோம் உம் பாதம்

என்றும் உயர்த்துவோம் உம் நாமம்


க க க க

ரி ரி ரி ரி

ஸ ஸ நி  ப ரி ஸ


ஸ க ம 

ப ம. ப ம. ப ம. ப

நி த ப, ம க













Popular Posts