திரித்துவ தெய்வ தரிசனம்

திரித்துவ தெய்வம்தனை நாடி 
வருவது தகுமோ இப்பாவி 
மகிமையின் பிரசன்னம் தேடி 
துதிப்பது தகுமோ இப்பாவி 

அலைகடல் ஆழம் கண்டு 
மலைகளின் உயர்வில் நின்று 
படைத்தவர் மகிமை கண்டு 
துரும்பென என்னை அறிந்து 

உணர்வினைத் துறந்தளித்து 
உறவினைப் பகிர்ந்தளித்து 
தரணியில் அருள்மொழிந்து 
சிலுவையில் உயிர்துறந்து 
மூன்றினில் உயிர்தெழுந்து 
உலகினை மீட்டெடுத்து 
பரத்தினில் வீற்றிருந்து 
நித்திய வாழ்வளிக்கும் 
எனதுயிர் இயேசுவையே 
தினம் துதி செய் மனமே 

இருளினில் வெளிச்சம் தந்து 
தாழ்வினில் உயர்வு தந்து 
குறைவினில் நிறைவு தந்து 
கறைகளைக் களைந்தெடுத்து 
தனிமையில் அழைத்தெடுத்து 
மறவேன் என்றுரைத்து 
உள்ளங்கையில் வரைந்துவைத்து 
கண்ணின் மணி போல காக்கும் 
எனதுயிர் இயேசுவையே
தினம் துதி செய்குவேனே 

Comments