சிலுவை மரம் Lyics

சிலுவை மரம், சிலுவை மரம்

திருச்சுதனைச் சுமந்த மரம்

சிலுவை மரம், சிலுவை மரம்

திருப்பலியைக் கொடுத்த மரம்

திருப்பலியைக் கொடுத்த மரம்


​பாவக்கடல் நீந்துவோர்க்குத் தோணி இது

பரலோக வாசலுக்கோர் ஏணி இது //

துன்பம் எனும் நோய் தீர்க்கும் மருந்து இது

பரமனோடு வாழ்வு சேர்க்கும் விருந்து இது //


​கல்வாரி மாமலையின் காட்சி இது

தியாகத்தின் உச்சத்தின் கோலம் இது //

இருளில் வாழும் மாந்தரின் வெளிச்சம் இது

இளைப்பாறும் நேரத்தில் நல் நிழலும் இது //

Comments