ஆழக்கடலினிலே படகோடி

Written and Composed together with Harald Sathiyaseelan and Adrian Suthakar


ஆழக்கடலினிலே படகோடி

இயேசு பிறந்த செய்தி சொல்லுவோமா

 

உலகமெல்லாம் இயேசுவை அறிந்திடவே

இருளெல்லாம் வெளிச்சமாய் மாறிடவே

கரைகள் நோக்கி நாம் விரைந்திடுவோம்

இயேசு பிறந்த செய்தி சொல்லிடுவோம்

 

நடுக்கடலில் திசையறியாதிருக்கையிலே

துணையேதும் இல்லையென்று திகைக்கையிலே

வெளிச்ச வீடாக இயேசு சுவாமி வந்துதித்தார்

திசையைக் காட்டிடவே பூவில் வந்துதித்தார்

திசையறிவோம் கரையறிவோம்

இயேசு பிறந்த செய்தி எடுத்துரைப்போம்

உலகெங்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்திடுவோம்

 

கொடுமையான புயல் உன்னை சூழ்ந்தாலும்

தடுமாறும் படகாய்  நீ இருந்தாலும்

இயேசு பிறந்துள்ளார் உன்னைக் காத்திடுவார்

உன்னை மீட்டிடவே மண்ணில் வந்துதித்தார்

வருவாயா அறிவாயா

இயேசுவின் அன்பை நோக்கி விரைவாயா

ஆறுதல் கண்டடைந்து மகிழ்வாயா

 

 

பெத்தலகேமிலிருந்து  ஒரு வாக்குத்தத்தம்

மண்ணில் உதித்த இயேசுவே அந்த வாக்குத்தத்தம் 

Comments

Popular Posts